காஞ்சி ஸ்ரீ மஉறா சுவாமிகள் அருளிய
ஸ்ரீ துர்க்கா பஞ்சரத்ன ஸ்தோத்திரம்

- தமிழாக்கம்

தேத்யானயோகானுகதா அபச்யன்
த்வாமேவ தேவீம் ஸ்வகுணைர் நிகூடாம்
த்வமேவ சக்தி: பரமேச்வரஸ்ய
மாம் பாஹி ஸர்வேச்வரி மோக்ஷதாத்ரி ||

தேவாத்மசக்தி: ச்ருதிவாக்யகீதா
மகர்ஷிலோகஸ்ய புர: ப்ரஸன்னா
குஉறா பரம் வ்யோம ஸத: ப்ரதிஷ்டா
மாம் பாஹி ஸர்வேச்வரி மோக்ஷதாத்ரி ||

பராஸ்ய சக்தி: விவிதைவ ச்ரூயஸே
ச்வேதாச்வ வாக்யோதித தேவி துர்க்கே
ஸ்வபாவிகீ ஞானபலக்ரியா தே
மாம் பாஹி ஸர்வேச்வரி மோக்ஷதாத்ரி ||

தேவாத்ம சப்தேன சிவாத்மபூதா
யத்கூர்ம வாயவ்யவ சோவிவ்ருத்யா
த்வம் பாசவிச்சேதகரீ ப்ரஸித்தா
மாம் பாஹி ஸர்வேச்வரி மோக்ஷதாத்ரி ||

த்வம் பிரம்மபுச்சா விவிதா மயூரி
ப்ரும்ம ப்ரதிஷ்டாஸ்யுபதிஷ்ட கீதா
க்ஞான ஸ்வரூபாத்மதயாகிலானாம்
மாம் பாஹி ஸர்வேச்வரி மோக்ஷதாத்ர ||

சூட்சும குணங்கள் நிறைந்தவளே, அன்னை பராசக்தியே!
ஆழ்ந்த தியான யோகியர்க்கே அருட்கண் களிக்கும் காட்சியே!
தேவியே, பரமேசுவரனை இயக்கிடும் மூலசக்தியே!
ஸர்வலோக ஈச்வரியே, நீதான் எனக்கு முக்தியே!

தெய்வ ஆத்ம சக்தியே, மறைகள் போற்றும் கீதமே!
தேவரிஷிகள் அனைவரும் புகழும் சத்ய ரூபமே!
விரிந்து பரவி உலகினை நிலைக்கச் செய்யும் புத்தியே!
ஸர்வலோக ஈச்வரியே, நீதான் எனக்கு முக்தியே!

உயர்ந்த பரப் பிரம்மத்தில் உலவும் ஸ்வர ரேகையே!
உபநிடத சாரமே, உயர்வேத ஊற்று துர்க்கையே!
ஞானம் செயல் பலமெலாம்நின் இயல்பான புஷ்டியே!
ஸர்வலோக ஈச்வரியே, நீதான் எனக்கு முக்தியே!

கூர்மபுராண வசனங்கள் உன்னை ‘தேவி’ என்று போற்றுமே!
வாயு புராணச் சொற்களும் உன்னை ‘ஆத்மா’ என்று கூறுமே!
பாசப் பிணியைப் போக்குகின்ற புகழின் உச்சித் திலகமே!
ஸர்வலோக ஈச்வரியே, நீதான் எனக்கு முக்தியே!

காணும் அனைத்துப் பொருட்களின் ஞான ஆத்ம வடிவமே!
நிலைத்த பிரம்ம ரூபமே, நீ அருளியது கீதையே!
வண்ணமயில் உருவமே, பரம்பொருள்தான் உனது தோகையே!
ஸர்வலோக ஈச்வரியே, நீதான் எனக்கு முக்தியே!

     
Copyright © www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com