சஷ்டியின் நாதா ஆறுமுக நந்தா!

ஓம்காரத்தின் ஒலியாக ஒலித்திடும் முருகா

ஆழ்கடலின் அலைகளில் ஆடிவரும் அழகா

குன்றுதோறும் கோலம் கொண்ட குழந்தையான வீரா

குறிஞ்சிப் பூவின் தேனாய்த் தித்திக்கும் குமரா

திருநீற்றின் மருந்தாகத் திகழ்கின்ற திலகா

திருச்செந்தூர்த் தலம் வாழும் தேவாதி தேவா

மயில் மீது ஏறிவரும் சிவகாமி பாலா

சேவற்கொடி ஏந்திவரும் சிங்கார வேலா

கார்த்திகைப் பெண்களின் கண்மணியே கந்தா

சஷ்டியின் நாதா ஆறுமுக நந்தா

மாசில்லாத அன்புகொண்ட வள்ளியின் நேசா

தெய்வானை அணங்கின் மணமகிழும் தீரா

நினைத்தாலே வந்திடுவாய் பக்தர் மனவாசா

வேண்டுவன தந்திடுவாய் வான்முகிலே ஈஷா!

     
Copyright © www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com