மயிலாடுது வண்ண மயிலாடுது

மயிலாடுது பார் அழகு மயிலாடுது
வான்முகில் கூட்டம் கண்டு வண்ண மயிலாடுது
கோவிந்தன் குழல் கேட்டு மயிலாடுது
அவன் அரிகாம்போதி ராகத்திற்கு மயிலாடுது

மயிலாடுது பார் அழகு மயிலாடுது
சண்முகநாதன் சலங்கை ஒலி கேட்டு மயிலாடுது
வானவில்லின் வண்ணம் கண்டு மயிலாடுது
மழைத் துளிகள் தீண்டுவதால் மயிலாடுது

மயிலாடுது பார் அழகு மயிலாடுது
நீலகண்டன் நடனம் கண்டு மயிலாடுது
அவன் டமருகத்தின் நாதத்திற்கு மயிலாடுது
நந்தி தேவன் மத்தளம் தட்ட மயிலாடுது

மயிலாடுது பார் அழகு மயிலாடுது
மலைமகளின் நடையைக் கண்டு மயிலாடுது
அவள் மெட்டி ஒலி ஜதி போட மயிலாடுது
மலைச்சாரல்தனில் நீல மயிலாடுது

மயிலாடுது பார் அழகு மயிலாடுது
பக்தர்களின் அரோஹரா கோஷத்திற்கு மயிலாடுது
அவர்கள் காவடி ஆட்டம் கண்டு மயிலாடுது
தீந்தமிழ் சிந்துப் பாட்டினுக்கு மயிலாடுது

     
�Copyright © www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com