ஓம்

நமச்சிவாய வாழ்க

Mrs. Soundara Kailasam
W/o: Amarar Justice P.S.Kailasam
Judge, Supreme Court of India (Retd)
"Muruganadi"
24 Kasthuri Rangan Road
Teynampet
Chennai 600 018
Ph: 044-2499 2527

15.10.2008


செந்தமிழ்த் திருநாட்டில் செட்டி நாட்டரசர் டாக்டர்.இராஜா ஸர் அண்ணாமலை செட்டியாரவர்களையும் அவருடைய திருமகன் திரு.சிதம்பரம் செட்டியார் அவர்களையும் தெரியாதவர்கள் இருக்க மாட்டார்கள்.

செல்வம் தேடவேண்டும், அச்செல்வத்தைப் பத்திரமாகப் பாதுகாக்க வேண்டும், செவ்வனே திட்டமிட்டு நல்ல காரியங்களுக்கு அதைச் செலவிட வேண்டும் என்ற நல்ல நோக்கத்தில் வாழ்நாளெல்லாம் செயல்பட்டவர் திரு.அண்ணாமலை செட்டியாரவர்கள்.

கல்வி வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டவர். தில்லையில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகம் அதற்குச் சான்று.

இன்று இசையரங்குகளில் தமிழ்ப் பாடல்கள் பாடப்படுவதற்கு அடிகோலியவர். தமிழிசைச் சங்கம் நிறுவி தமிழிசை வளர வேண்டும் என்று பெரிதும் உழைத்தவர் அவர்.

தென்னாட்டில் பல தொழில்களைத் தொடங்கி ஆயிரக் கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்தவர் திரு.அண்ணாமலை செட்டியார்.

அவருடைய அருமைப் புதல்வர் திரு.சிதம்பரம் செட்டியாரவர்களும் தொடர்ந்து கல்விப் பணி, தமிழிசைப் பணி ஆகியவற்றில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர்.

தொழில் துறையிலும் விளையாட்டுத் துறையிலும் தனி முத்திரை பதித்தவர்.

திரு.சிதம்பரம் செட்டியாரவர்களின் மைந்தர் திரு.A.C.முத்தையா அவர்களும் தம் தந்தையாரின் அடியொற்றி அறப்பணிகள் செய்து வருகின்றார்.

திருக்கடவூர் அபிராமி அம்மை உடனாய அமிர்தகடேஸ்வரர் திருக்கோயிலுக்கும், புள்ளிருக்கு வேளூர் வைத்தியநாதசுவாமி திருக்கோயிலுக்கும் பெருந்தொகை வழங்கியவர்.

தொழில் வளர்ச்சியில் தனக்கென ஒரு சிறப்பான இடத்தை தேடிக் கொண்டவர்.

திரு.A.C.முத்தையா செட்டியார் அவர்களின் துணைவியார் திருமதி.தேவகி முத்தையா அவர்கள் மிகச் சிறந்த தமிழறிஞர். நல்ல புலமை உள்ளவர்.

அபிராமி அந்தாதி நூலை ஆய்ந்து விளக்கவுரை எழுதியவர்.

'அபிராமி' என்னும் பத்திரிக்கைக்கு தொடர் கட்டுரைகள் எழுதி வருபவர். அக்கட்டுரைகள் ஆன்மீக உலகில் நல்ல வரவேற்பைப் பெறுகின்றன.

சென்ற 12.10.2008 அன்று திரு.மு.அ.சிதம்பரம் செட்டியார் அறக்கட்டளையின் சார்பில் தமிழ்க் கவிதைகளுக்காக எனக்கு விருது வழங்கி வெள்ளிப் பேழையிலிட்ட ஒரு இலட்ச ரூபாய்க்கான காசோலை அளித்தார்கள்.

அது குறித்து, திரு.A.C.முத்தையா செட்டியாரவர்களுக்கும் திருமதி.தேவகி முத்தையா அவர்களுக்கும் திரு.அஸ்வின் சிதம்பரம் முத்தையா அவர்களுக்கும் என் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

திரு.A.C. முத்தையா செட்டியார் அவர்கள் என்பால் மிகுந்த அன்புள்ளவர்.

திருமதி.தேவகி முத்தையா அவர்கள் என்பால் காட்டும் அன்புக்கு எல்லையே இல்லை. அவர் எங்கள் இல்லத்துக்கு வரும் போதெல்லாம் மிட்டாய்கள், சாக்லெட்டுகள், பிஸ்கட்டுகள் வாங்கி வருவார்.

She is so sweet. திருமதி தேவகி முத்தையாவப் பற்றி நான் இப்படிச் சொல்வதற்காகத் திரு.A.C.முத்தயா அவர்கள் பொறாமைப்படக் கூடாது. பெருமைப்பட்டுக் கொள்ள வேண்டும்.

எனக்கு விருது வழங்கும் விழாவில் திருமதி.தேவகி முத்தையா அவர்கள் என்னப் பற்றி மிகவும் விரிவாகப் பேசிப் பெரிதும் பாராட்டினார். அதற்குக் காரணம் அவர் என்பால் கொண்டுள்ள பற்றும் பாசமுமே. அவருக்கு என் உளம் நிறந்த நன்றியை உரித்தாக்குகிறேன்.

கணவனின் காரியங்கள் யாவற்றிலும் கைகொடுக்கும் திருமதி.தேவகி முத்தையா மிக மிக அடக்கமானவர். தெய்வ பக்தி மிக்கவர்.

தேவாரம், திருவாசகம், திவ்யப்பிரபந்தம் ஆகியவற்றை மேலும் மேலும் பரவச் செய்வதற்குப் பாடுபடுபவர்.

திருத் தருமபுர ஆதீனகர்த்தரிடம் மிகுந்த பக்தி உடையவர்.

தன் மாமனார் திரு.சிதம்பரம் செட்டியாரவர்களிடமும் மாமியார் திருவாட்டி.அபிராமி ஆச்சி அவர்களிடமும் மிகுந்த மரியாதை உள்ளவர்.

தன் கணவரின் தங்கை திருமதி.சீதாவிடம் அளவற்ற அன்புள்ளவர்.

திரு.சிதம்பரம் செட்டியார் அவர்களின் திருமகள் சீதாவும் மருமகள் தேவகியும் மிகுந்த அன்போடும் பாசத்தோடும் இணந்திருப்பதைக் காணும் திரு.சிதம்பரம் செட்டியாரவர்களும் அவர்தம் துணைவியாரும் மிகவும் மகிழ்வார்களாம்.

நிலையில் திரியா அடக்கமாக உள்ள திரு.A.C. முத்தையா செட்டியாரவர்களுக்கு ஏற்ற துணைவியாக விளங்குபவர் திருமதி.தேவகி முத்தையா.

திரு.A.C.முத்தையா செட்டியார், திருமதி.தேவகி முத்தையா, திரு.அஸ்வின் சிதம்பரம் முத்தையா அவர்தம் அன்பு மனவி மற்றும் குடும்பத்தார் எல்லோரும் உடல் நலத்துடனும் பெருகி வரும் வளத்துடனும் பல்லாண்டு மகிழ்ச்சியாக வாழத் திருமுருகன் திருவடிகளைச் சிந்தித்து வாழத்துகிறேன்.



பாசமுடன்,
சௌந்தரா கைலாசம்

நாதன்தாள் வாழ்க

     
©©2005 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com