ஸ்ரீராமஜெயம்


ஜுன் மாத "அபிராமி" இதழில் "முத்துக்குளிக்க வாரீகளா" எனும் கட்டுரையில் ராஜபாளையம் கற்பகாம்பாள் நூல் ஆலையில் அ.ச.ஞானசம்பந்தம் அவர்கள் தமது உரையில் முத்துக் குளிப்பது பற்றிய செய்தியைக் கூறியதை எழுதியிருந்தேன். அதைப் படித்த சகோதரர், இலக்கியச் சிந்தனையாளர் மதிப்பிற்குரிய ப.லெட்சுமணன் அவர்கள் உணர்ச்சி பூர்வமாக எழுதியனுப்பிய பாடல் இது. இந்த வாழ்த்திற்கு ஈடாக இவ்வுலகயே எனக்குத் தருவதென்றாலும் அது எனக்கு வேண்டாம்! இந்த அன்பு ஒன்று போதும் !!


தேவகி முத்தையா

புண்ணிய பூமி பெற்ற
புண்படாத விடுதலைக்குக்
கண்ணியமாய்ப் பொன்விழாக் காண
கற்பகத்தின் மக்கள் விழைந்தார்

எண்ணிலா நற்குணங்கள் பெற்ற
ஏந்தல்கள் ஏற்றமிகு அறிஞர்கள்
நண்ணி விழா எடுத்தார்
நன்மையும் உண்மையும் நாளும் மலர்ந்திட

அன்பும் நட்பும் கைகோர்த்து
பண்புடன் பொலிந்த பேச்சில்
என்பையும் உருக்கும் கதை சொன்னார்
என்னுடைய குருதேவர்

கடல் என்றும் முத்து என்றும்
கனித் தமிழில் விளக்க
உடல் இரண்டு உயிர் ஒன்றுமாய்
உவகை பொங்கி வழிந்தது.

பத்தொன்று ஆண்டுகள் கடந்தும்
பத்தினித் தெய்வம் நினைவிற்கொண்டு
முத்துக் குளிப்பதை முத்தமிழில் நெகிழ
முகிழ்த்தது முத்து; கடலில் அல்ல கண்களில்

அன்புச் சகோதரி,
உங்கள் கட்டுரை என்னை மெய்சிலிர்க்க வைத்தது
நன்றி, வணக்கம்
நலம் பெருகுக

அன்புடன்
ப. லெட்சுமணன்

     
©©2005 www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com