அபிராமி இதழில் அம்மையாரின் கட்டுரைகள்


‘தேவகி என்ற இந்தப் பெயர் எத்தனை அர்த்தமுள்ள பெயர் என்பதை அபிராமி-2003 அக்டோபர் இதழில் தாங்கள் எழுதியுள்ளதைப் படித்த பின்தான் அறிந்தேன். தங்களுக்கு இப்பெயர் 100% பொருத்தமே

தாங்கள் அற்புதமான கவிஞர் என்பதற்கு ‘என்ன கிளியே! வண்ணக் கிளியே!' கவிதை சான்று.

‘கதையல்ல இது நிஜம்'-மகான்களின் ஆசி பெற்ற நல்லவர் வாழ்வில் இப்படி நடப்பது உண்மையே!

‘பாரம்பரியம் காக்கும் நமது பண்பாடு!’

‘சொல்வாய் நீ வெண் சங்கே!"

‘பழுத்த வெள்ளரிப் பழம் போல"

கட்டுரைகள் கருத்துப் பெட்டகங்கள்.

வேளாண்மைத் துறையும் தங்களுக்கு அத்துபடியா? ‘வாழையடி வாழை-வாழை போலத் தன்னைத் தந்து தியாகியாகலாம் என்ற உண்மையையும் கூறுகிறது.

பீஷ்ம பிதாமகர்-ஆய்ந்து தேர்ந்து எழுதிய கட்டுரை. சக்கரத்தில் இத்தனை செய்திகளா? திருச்சி சுவாமிகள்-பெரிய மகான். நான் செட்டிநாட்டில் பலமுறை தரிசித்தப் பேறு பெற்றேன்.

வித்வான் வே.லட்சுமணன் அவர்களிடம் நட்பும் பாசமும் எனக்குக் கிடைத்தன. தாங்கள் அவரது சதாபிஷேகத்தில் கலந்து கொண்ட மகிழ்ச்சியான அனுபவம் கட்டுரையானது.

‘என்ன அவசரம் வித்வான்?" பாசமிகு அஞ்சலி அழ வைக்கிறது.

ஸ்ரீ ராஜராஜேஸ்வரி அஷ்டகப் பொருள் விளக்கம் அருமை! இப்படிப்பட்ட செந்தமிழ்த் திலகம் பல்லாண்டு தீர்க்கசுமங்கலியாக வாழையடி வாழையாக வம்சம் செழித்து ஓங்கு புகழோடு தொகை தரு பதினாலு பேறும் பெற்று வாழ்க! வளர்க!

வாழ்த்தும் சகோதரி

சரசுவதி இராமநாதன்

என் கணவருக்கு 81. சதாபிஷேகம் செய்து கொண்டவர்கள். ஆகவே வாழ்த்தும் தகுதி வயதாலும் உண்டு. தமிழாலும் உண்டு. பாசத்தாலும் உண்டு.

‘ஆன்மீகச்சுடர்'. ‘செந்தமிழ்த்திலகம்' திருமதி தேவகி முத்தையா,M.A.,M.Phil.,
அவர்களின் அபிராமி அந்தாதி தெளிவுரை வரப்பிரசாதன் என்பேன். முறையோடு இசை பயின்று, அபிராமி அந்தாதிப் பாடல்களைப் பாடும் திறம் பெற்ற செந்தமிழ்த் திலகம் இவர். தமிழில் இவருக்குள்ள புலமை கண்டு வியக்கிறேன்.

தம் கணவரான செட்டி நாட்டுச் செம்மல், மிகச்சிறந்த தொழிலதிபர். குளிர்ச்சி (AC) தவழ் பார்வையும், வார்த்தையும் கொண்ட நன் முத்தையாவின் பால் பக்தி கொண்ட மாதரசி இவர் வணக்கத்திற்குரியவர்.

இனி நூலுக்குள் வருவோம்.

இயல்களைப் பகுத்துக் கொண்ட அழகே இவர் சிறந்த ஆராய்ச்சியாளர் என்பதைக் காட்டும்.

1. சமயக் கூறுகளின் தலையான தன்ம-‘பரசமயம் விரும்பேன்' என்பதும் வெறும் தெய்வம் உண்டென்று கொண்டாடுவது வீண் என்பதும் இதத் தெளிவுபடுத்கிறார் அம்மையார். அபிராமியின் வண்ணமும் உருவமும், திருப்பெயர்கள் எது தவம்! சாக்த உபாசனை பகுதிகள் படித்து இன்புறுவடன் ஆழ்ந்து சிந்திக்க வைப்பன.

2. இலக்கியத்திற்கு இன்றியமையாத உணர்ச்சி. Spontaneous overflow of powerful feelingsதானே கவிதை! உணர்ச்சி, ஓசை, கற்பனை, வருணனை, அணிகள், சொல்லழகு இவற்றைப் பாடலடிகளைச் சான்று காட்டி அடுக்கும் அழகு போற்றுதற்குரியது.

3. சமய இலக்கியங்களுடன் அபிராமி அந்தாதியை ஒப்பிடும் இயல் இது. பக்தி வளாகம் என்ற சொல்லாட்சியை நான் வியந்து வியந்து பார்க்கிறேன். நன்னெறி, தீநெறி இவற்றைச் சுட்டி நன்றின் பால் உய்ப்பது பக்தி இலக்கியம் என்கிறார். பிறவாமையும், இறவாமையும், மறவாமையும், பிறவிக் கடலும் ஆசைக்கடலும் காலன் வரும்போது காவல் அவளே-இப்படி நல்ல, அரிய செய்திகள நற்றமிழ் நூலாக்கித் தந்து இலக்கியத் தொண்டும் சமயத் தொண்டும் செய்ள்ளது அம்மா அவர்களுக்கு அனந்தகோடி நமஸ்காரங்கள். வாழ்க வளமுடன்.

அன்புச் சகோதரி,
சரசுவதி இராமநாதன்

பேரன்புடய, மதிப்பிற்குரிய சகோதரியார் அவர்களுக்கு,

வணக்கம் பல. நலமே நிறக. அபிராமி அந்தாதி, தெளிவுரை, ஆராய்ச்சி, அபிராமியில் தங்களின் எழுத்தாற்றல் எல்லாம் என்னை பரவசப்படுத்தின. உண்மை வெறும் புகழ்ச்சியில்லை. தங்களின் அறிமுகம் என் பேறு. அற்புதமான தமிழ் நடை! தூய சிந்தனை. தெய்வீகமான குடும்பம் தங்களுடயது. வாழ்க.

அன்பு சகோதரி,

சரஸ்வதி இராமநாதன்

     
©Copyright © www.devakimuthiah.com | Designed & Developed by : www.cherrytec.com